Advertisement

தர்மபுரியில் (ஜூன் 16) மின்தடை...மின்வாரியம் அறிவிப்பு

By: vaithegi Wed, 15 June 2022 12:39:40 PM

தர்மபுரியில் (ஜூன் 16) மின்தடை...மின்வாரியம்  அறிவிப்பு

தர்மபுரி: ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மின் ஊழியர்கள் மூலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், இன்றைய சூழலில் மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் எந்த அளவுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்துகிறது

maintenance works,power supply,resistance ,பராமரிப்பு பணிகள்,மின்வாரியம்  ,மின்தடை

பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அவ்விதமாக நாளை வியாழக்கிழமை (ஜூன் 16)ல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு மின் தடை செய்யப்படவுள்ளது.

அவ்விதமாக மொரப்பூர், நைனா கவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பி செட்டிப்பட்டி, கிட்டனூா், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் என குறிப்பிட்ட பகுதிகளில் நாளை (ஜூன் 16) அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.

Tags :