Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

By: Monisha Wed, 02 Dec 2020 08:55:39 AM

சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காட்டுக்குள் வந்துள்ளதையடுத்து சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் இருந்து நாகர்கோவில், மன்னார்குடி, ராமேசுவரம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-மன்னார்குடி (06179) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் இரவு 10.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக மன்னார்குடி-எழும்பூர் (06180) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் இரவு 10.30 மணிக்கு மன்னார்குடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருவனந்தபுரம் (02695) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மதியம் 3.20 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம்-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02696) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

chennai,special trains,thiruvananthapuram,mangalore,rameswaram ,சென்னை,சிறப்பு ரெயில்கள்,திருவனந்தபுரம்,மங்களூர்,ராமேசுவரம்

எம்.ஜி.ஆர் சென்டிரல்-மங்களூர் (02685) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் மாலை 5 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்தும், மறுமார்க்கமாக மங்களூர்- எம்.ஜி.ஆர். சென்டிரல் (02686) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் மாலை 4.35 மணிக்கு மங்களூரில் இருந்தும் இயக்கப்படும்.

எழும்பூர்-நாகர்கோவில் (06063) இடையே சிறப்பு ரெயில் வருகிற 10-ந்தேதி முதல் மாலை 6.55 மணிக்கு எழும்பூரில் இருந்தும், மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் (06064) இடையே சிறப்பு ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் மாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்தும் இயக்கப்படும்.

chennai,special trains,thiruvananthapuram,mangalore,rameswaram ,சென்னை,சிறப்பு ரெயில்கள்,திருவனந்தபுரம்,மங்களூர்,ராமேசுவரம்

எழும்பூர்-ராமேசுவரம் (06852) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் இரவு 7.15 மணிக்கு எழும்பூரில் இருந்தும், மறுமார்க்கமாக ராமேசுவரம்-எழும்பூர் (06852) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் மாலை 5.10 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்தும் இயக்கப்படும்.

எம்.ஜி.ஆர் சென்டிரல்-பாலக்காடு (02651) இடையே சிறப்பு ரெயில் வருகிற 8-ந்தேதி முதல் சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கும், மறுமார்க்கமாக பாலக்காடு -எம்.ஜி.ஆர். சென்டிரல் (02652) இடையே சிறப்பு ரெயில் வருகிற 9-ந்தேதி முதல் பாலக்காடில் இருந்து மதியம் 3.35 மணிக்கும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கூறியுள்ளது.

Tags :