Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மங்களூரு - தாம்பரம் இடையே கோயம்பத்தூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம் என அறிவிப்பு

மங்களூரு - தாம்பரம் இடையே கோயம்பத்தூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம் என அறிவிப்பு

By: vaithegi Wed, 04 Oct 2023 10:51:51 AM

மங்களூரு - தாம்பரம் இடையே கோயம்பத்தூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம் என அறிவிப்பு


கோயம்பத்தூர் : சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

“கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரம் - மங்களூரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06049), தாம்பரத்திலிருந்து வருகிற 6, 13, 20, 27-ம் தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

special trains,mangaluru,tambaram , சிறப்பு ரயில்கள் , மங்களூரு , தாம்பரம்

மேலும், மங்களூரு - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்:06050), மங்களூருவில் இருந்து வரும் 7, 14, 21, 28-ம் தேதிகளில் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் ரயில்நிலையம் சென்றடையும்.

இதனை அடுத்து செல்லும் வழியில் இந்த ரயில்கள், காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலசேரி, வடகரா, கோழிக்கோடு, திரூர், சொர்ணூர், ஒட்டபாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Tags :