Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் எஸ்எஸ்சி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் எஸ்எஸ்சி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

By: vaithegi Fri, 17 June 2022 9:44:15 PM

மகாராஷ்டிராவில்  எஸ்எஸ்சி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

மகாராஷ்டிரா: நாடு முழுவதும் கொரோனா பெரும் நோய்த்தொற்று பரவல் ஓய்ந்து வந்ததையடுத்து மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் வழக்கமான முறையில் மீண்டுமாக செயல்படத் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட பொதுத்தேர்வுகளையும் அரசு இந்த ஆண்டு நேரடி முறையில் நடத்தி இருந்தது.

இந்நிலையில் தேர்வுகள் முடிவடைந்ததும் மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறைகளையும் அரசு அறிவித்தது. இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை அரசு வெளியிட்டுள்ளது.

அந்த படி இன்று (ஜூன் 17) வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளை மாணவர்கள் maharashtraeducation.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநில எஸ்எஸ்சி தேர்வுகளில் பங்கேற்ற 96.94 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளன என கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

exam results,lv board,students ,தேர்வு முடிவுகள்,ல்வி வாரியம் ,மாணவர்கள்

இதற்கிடையில் இன்று வெளியாகி இருக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் டிஜிலாக்கர் மூலம் தெரிந்து கொள்ளாம் என கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை ஆன்லைனில் மூலம் சரிபார்க்க:

முதலில் மகாராஷ்டிரா வாரிய இணையதளத்திற்குச் செல்லவும்
அதில் MSBSHSE SSC முடிவு 2022 இணைப்பைக் கிளிக் செய்யவும்
ரோல் எண்ணை உள்ளிடவும்
தற்போது தேர்வு முடிவு தோன்றும்.

Tags :