Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு

அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு

By: Karunakaran Mon, 14 Dec 2020 4:15:17 PM

அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

first public vaccination,united states,corona vaccine,corona virus ,முதல் பொது தடுப்பூசி, அமெரிக்கா, கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ்

முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த வார இறுதிக்குள் 30 லட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என கொரோனா தடுப்பூசி வினியோக திட்டங்களை கவனிக்கும் மூத்த ராணுவ அதிகாரி குஸ்டாவ் பெர்னா கூறினார்.

கொரோனாவை ஒழிப்பதில் 95 சதவீதம் செயல்திறன் கொண்ட பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்தில் ஏற்கனவே மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இதுதவிர பக்ரைன், சவுதி அரேபியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் பைசர் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :