Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு சட்டத்தை மீறிய 2,200 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிப்பு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 2,200 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிப்பு

By: Nagaraj Thu, 05 Nov 2020 09:57:13 AM

ஊரடங்கு சட்டத்தை மீறிய 2,200 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிப்பு

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 340 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலுள்ள மேல்மாகாணம் உள்ளிட்ட பொலிஸ் நிர்வாகப் பிரிவுகளில் கடந்த ஒக்ரோபர்-04 ஆம் திகதி முதல் நேற்று(04) வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 340 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

mask,curfew law,social space,legal action ,முகக்கவசம், ஊரடங்கு சட்டம், சமூக இடைவெளி, சட்ட நடவடிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட 220 பேர் நேற்று முன்தினமும், 75 பேர் நேற்றும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை அலட்சியம் செய்கின்றவர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags :
|