Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனவரி 6 ஆம் தேதி கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு

ஜனவரி 6 ஆம் தேதி கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு

By: vaithegi Thu, 12 Oct 2023 10:07:30 AM

ஜனவரி 6 ஆம் தேதி கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: அதிமுக 2 அணியாக பிரிந்து கிடக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் மோதலில் ஈடுபட்டுவருவதுடன் தனி அணியாக செயல்பட்டு கொண்டு வருகிறார். அனைத்து மாவட்டத்திற்கும் மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்திவருகிறார். இதனிடையே பாஜக- அதிமுக இடையே கூட்டணி முறிந்த நிலையில், தங்களுடன் பாஜக தொடர்பில் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். சட்டப்பேரவையிலும் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்-ம் எதிரும் புதிருமாக செயல்படுகிறார்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எழும்பூரில் நடைபெற்றது. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

conference,o. panneerselvam ,மாநாடு ,ஓ.பன்னீர்செல்வம்

இதையடுத்து இந்த கூட்டத்தில் வருகிற ஜனவரி 6 ஆம் தேதி கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க. 52-வது தொடக்க நாளை மையமாக வைத்து தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “நாங்கள்தான் அதிமுக, இரட்டை இலை வழக்கு இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. பாஜக தேசிய தலைமை உடன் நட்பின் அடிப்படையில் பேசி வருகிறேன். கூட்டணி பற்றி பேசவில்லை” எனஅவர் கூறினார்.

Tags :