Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கல்லூரிகள் ஜூலை 18-ஆம் தேதி துவங்கப்படும் என அறிவிப்பு

தமிழகத்தில் கல்லூரிகள் ஜூலை 18-ஆம் தேதி துவங்கப்படும் என அறிவிப்பு

By: vaithegi Fri, 01 July 2022 8:16:01 PM

தமிழகத்தில் கல்லூரிகள் ஜூலை 18-ஆம் தேதி துவங்கப்படும் என அறிவிப்பு

தமிழகம்: தமிழகத்தில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்தான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கலைக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் ஜூலை 18-ஆம் தேதி முதல் அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், CBSE தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

colleges,students ,கல்லூரிகள் ,மாணவர்கள்

மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரைக்குமே 85,902 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதனையடுத்து பள்ளிகளில் தொழிற்படிப்பு படித்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் 2 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அரசு பள்ளிகளில் பயின்று மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :