Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் கலந்தாய்வு வரும் ஆக.2ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு

பொறியியல் கலந்தாய்வு வரும் ஆக.2ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு

By: Nagaraj Fri, 05 May 2023 8:38:39 PM

பொறியியல்  கலந்தாய்வு வரும் ஆக.2ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2-ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023- 24 ம் கல்வியாண்டில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

consulting,engineering course ,கலந்தாய்வு ,பொறியியல் படிப்பு,  அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க அடுத்த மாதம் 4-ந்தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கான உத்தேச தேதி பட்டியலில், முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2 - ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையடுத்து பொது பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் செப்டம்பர் 24- ம் தேதி வரை நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ரேண்டம் எண் ஜூன் ஏழாம் தேதியும் , தரவரிசை பட்டியல் ஜூலை 12-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :