Advertisement

கேஸ் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது என்று அறிவிப்பு

By: Nagaraj Sat, 08 Apr 2023 11:11:05 PM

கேஸ் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது என்று அறிவிப்பு

புதுடெல்லி: கேஸ் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது...மரபு சார்ந்த துறைகள் மற்றும் ஓ.என்.ஜி.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களால் நடத்தப்படும் ஏ.பி.எம். வயல்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் தொடர்பாக கிரிட் பரிக் கமிட்டி வழங்கிய பல முக்கிய பரிந்துரைகளை மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஏற்றுக்கொண்டது.

இயற்கை எரிவாயு (CNG) மற்றும் உள்நாட்டு குழாய் எரிவாயு (PNG) ஆகியவற்றின் விலைகள் 10 சதவிகிதம் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்பட்ட இந்த எரிவாயு விலை, இனி மாதாந்திர அடிப்படையில் திருத்தப்படும். இந்த புதிய விலை அறிவிப்பு மாதத்தின் கடைசி நாளில் வெளியிடப்படும்.

10 percent,10 சதவீதம்,basic,less,natural gas,new gas policy,price, ,அடிப்படை, இயற்கை எரிவாயு, குறைவு, புதிய கேஸ் கொள்கை, விலை

இந்த எரிவாயு விலைக் குறைப்புகள் நுகர்வோருக்குக் கடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் இந்த விலைகளைக் கண்காணிக்கும். இந்த முக்கிய முடிவுகள் புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கொள்கையின் அடிப்படையில் இம்மாதத்தின் மீதமுள்ள நாட்களுக்கு (இன்று முதல் வரும் 30ம் தேதி வரை) சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜியின் விலையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

அதன்படி, இந்த எரிவாயு ஒரு யூனிட் (மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்) $7.92 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயில் சுமார் ரூ.648 ஆகும். ஆனால் மத்திய அரசு நுகர்வோருக்கு அதிகபட்ச விலையாக யூனிட் ஒன்றுக்கு 6.5 டாலர் (சுமார் ரூ.532) என நிர்ணயித்துள்ளது. 2025 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதனுடன் கேஸ் விலை 10 சதவீதம் குறைந்துள்ளது.

Tags :
|
|
|