Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிப்பு

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிப்பு

By: Nagaraj Thu, 23 Mar 2023 7:53:31 PM

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிப்பு

சென்னை: 2 நாட்களுக்கு மழை... சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 days,rain,storm , அறிவிப்பு, மழை, வானிலை, இடியுடன்

சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|