Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நாளை மறுநாள் நடக்கும் என அறிவிப்பு

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நாளை மறுநாள் நடக்கும் என அறிவிப்பு

By: vaithegi Tue, 03 Oct 2023 3:12:12 PM

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நாளை மறுநாள் நடக்கும் என அறிவிப்பு

சென்னை: அக்.5 இல் கூடுகிறது பாஜக நிர்வாகிகள் கூட்டம் ...தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வரும் நிலையில் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சமீபத்தில் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து தெரிவித்த கருத்து ஆனது சர்ச்சையை கிளப்பிய நிலையில் பாஜக அதிமுக கூட்டணியில் பெரும் பிளவு ஏற்பட்டது.

எனவே இதன் அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்கப் போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட எத்தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அதிமுக தலைமையில் மீண்டும் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

bjp executives consultative meeting,annamalai ,பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ,அண்ணாமலை


இச்சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். கூட்டணி முறிவு தொடர்பாக அவர் பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்டது. இந்த சூழலில் சென்னையில் இன்று நடைபெறயிருந்த பாஜக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டம் வேறு தேதியில் நடத்தப்படும் இல்லையெனில் நேரம் மாற்றி அறிவிக்கப்படும் என பாஜக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெறுவதாக இருந்த பாஜக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் வருகிற அக்.5ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பும் நிலையில் வரும் அக்.5இல் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :