Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவிஷீல்டு தடுப்பூசி 4 கோடி ‘டோஸ்’ தயாரித்து முடிக்கப்பட்டதாக அறிவிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசி 4 கோடி ‘டோஸ்’ தயாரித்து முடிக்கப்பட்டதாக அறிவிப்பு

By: Karunakaran Fri, 13 Nov 2020 08:58:40 AM

கோவிஷீல்டு தடுப்பூசி 4 கோடி ‘டோஸ்’ தயாரித்து முடிக்கப்பட்டதாக அறிவிப்பு

கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் பலவும் தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து வருகின்றன. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா என்ற மருந்து நிறுவனமும் இணைந்து கூட்டாக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை புனேயை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியுட் தயாரித்து, வினியோகிக்கும் உரிமையை பெற்றுள்ளது.

தற்போது சீரம் இன்ஸ்டிடியுட்டும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இந்தியாவில் 15 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துகின்றன. இந்த தடுப்பூசி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகையில், மருத்துவ பரிசோதனையின் நம்பிக்கைக்குரிய முடிவுகள், கோவிஷீல்டு தடுப்பூசி, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு யதார்த்தமான ஒரு தீர்வாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இந்த தடுப்பூசி இந்தியாவில் மனித பரிசோதனையில் மிகவும் மேம்பட்ட தடுப்பூசி ஆகும் என தெரிவித்தது.

covshield vaccine,4 crore doses,india,corona vaccine ,கோவ்ஷீல்ட் தடுப்பூசி, 4 கோடி அளவு, இந்தியா, கொரோனா தடுப்பூசி

2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உதவியுடன் சீரம் இன்ஸ்டிடியுட், இந்த தடுப்பூசியை விரைவில் இந்தியாவில் கிடைக்கச்செய்யும். ஏற்கனவே இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அபாயகரமான உற்பத்தி மற்றும் கையிருப்பு உரிமத்தின்கீழ் 4 கோடி டோஸ் தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியுட் ஏற்கனவே தயாரித்து முடித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது.

இதற்கு மத்தியில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம், கோவோவேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்திலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் இந்தியாவில் நடத்தப்படும். இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்திலும், உலகளாவிய தயாரிப்பிலும் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது என குறிப்பிட்டார்.

Tags :
|