Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரம்மாண்ட மிதக்கும் உணவகம் கடலில் மூழ்கியதாக அறிவிப்பு

பிரம்மாண்ட மிதக்கும் உணவகம் கடலில் மூழ்கியதாக அறிவிப்பு

By: Nagaraj Wed, 22 June 2022 00:41:29 AM

பிரம்மாண்ட மிதக்கும் உணவகம் கடலில் மூழ்கியதாக அறிவிப்பு

ஹாங்காங்: மிதக்கும் உணவகம் கடலில் மூழ்கியது... ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், ஜம்போ கடலில் மூழ்கிவிட்டதாக வெளியான அறிவிப்பு உலகெங்கிலும் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், 1976 ஆம் ஆண்டு 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டது. உலக பிரபலங்கள் பலரின் மனம் கவர்ந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டல் ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்தது என்றால் மிகையில்லை. ஹாங்காங் வரும் பலரும் இந்த ஹோட்டலில் உணவருந்த வருவார்கள். சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பும் இடமாக இருந்ததோடு, உள்ளூர் மக்கள் தங்களது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த உணவகத்தை கருதி வந்தனர்.

china sea,jumbo,float,ship,restaurant,sinking ,சீனா கடல், ஜம்போ, மிதவை, கப்பல், உணவகம், மூழ்கியது

கொரோனா உலலெங்கிலும் சுற்றுலா துறை, ஹோட்டல் துறை, போக்குவரத்து துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டலும், இந்த பாதிப்பில் இருந்து தப்ப இயலவில்லை.

ஜம்போ மிதவை ஹோட்டலும் கொரோனா காலத்தில் கடும் நிதிநிலை நெருக்கடியை சந்தித்தது. உணவகத்தை தொடர்ந்து நடத்த முடியாததால் 2020 ஆம் ஆண்டு உணவகத்தை மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. மேலும், அதில் பணியாற்றி வந்த ஊழியர்கள் வேலை இழந்தனர். பராமரிப்பு செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் ஹோட்டலை ஹாங்காங்கில் கடந்த 14 ஆம் தேதி இந்த மிதக்கும் கப்பல் ஹாங்காங்கில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தென் சீன கடலில் உள்ள ஷீஷா தீவில் சென்றுகொண்டிருந்த போது ஜம்போ மிதவை கப்பல் நீரில் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



Tags :
|
|
|