Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ராஜஸ்தான் அரசு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக அறிவிப்பு

1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ராஜஸ்தான் அரசு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக அறிவிப்பு

By: vaithegi Sat, 20 Aug 2022 07:15:05 AM

1.35 கோடி குடும்ப தலைவிகளுக்கு ராஜஸ்தான் அரசு ஸ்மார்ட்போன் வழங்க உள்ளதாக அறிவிப்பு

ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனை அடுத்து அங்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் முதல்-மந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை முதல்-மந்திரி அசோக் கெலாட் அவர்கள் அறிவித்தார்.

எனவே அதன்படி, சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது. மேலும் 3 ஆண்டுகளுக்கு இணைய இணைப்பும் அளிக்கப்படுகிறது.

smartphone,government of rajasthan,head of family ,ஸ்மார்ட்போன் ,ராஜஸ்தான் அரசு,குடும்ப தலைவி

இதை அடுத்து இதற்கான திட்ட செலவு ரூ.12 ஆயிரம் கோடி ஆகும். இதன் இடையே, இந்த திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டது. இதனைத்தொடர்ந்து இணைய இணைப்பு அளிப்பதற்கு 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

அவற்றில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மேலும் பண்டிகை காலம் தொடங்குவதற்குள், முதல்கட்ட ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான பணிகளை ராஜஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது,

Tags :