Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செப்டம்பர் மாதம் முதல் பள்ளி திறக்கப்படும் என்று அறிவிப்பு

செப்டம்பர் மாதம் முதல் பள்ளி திறக்கப்படும் என்று அறிவிப்பு

By: Nagaraj Fri, 21 Aug 2020 9:40:16 PM

செப்டம்பர் மாதம் முதல் பள்ளி திறக்கப்படும் என்று அறிவிப்பு

பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு... பிரான்ஸில் வரும் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இதன்காரணமாக தொழில்நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இயல்புநிலைக்கு திரும்புவது குறித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் மக்ரோன், “கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளையில் பள்ளிகளைத் திறப்பது குறித்தும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனாவுடன் வாழ மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்.” என்றார்.

france,schools opening,september,prime ,பிரான்ஸ், பள்ளிகள் திறப்பு, செப்டம்பர் மாதம், பிரதமர்

முன்னதாக ஜெர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ​அந்த நிகழ்ச்சியில் ஐரோப்பிய நாடுகள் எதிர்வரும் வாரங்களில் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி விநியோகங்களில் ஒருங்கிணைந்து செயல்படும் என இருவரும் கூட்டாக உறுதியளித்தனர்.

வகுப்பறைகளில் குழந்தைகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க முடியாது என்பதால் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரான்சின் தேசிய சுகாதார நிறுவனம் நேற்று 4,771 புதிய கொரோனா தொற்றுநோய்களைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|