Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க விண்வெளிப்படை வீரர்கள் ’கார்டியன்ஸ்’ என அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பு

அமெரிக்க விண்வெளிப்படை வீரர்கள் ’கார்டியன்ஸ்’ என அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பு

By: Karunakaran Sat, 19 Dec 2020 08:24:34 AM

அமெரிக்க விண்வெளிப்படை வீரர்கள் ’கார்டியன்ஸ்’ என அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பு

உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் பாதுகாப்புத்துறைக்கு அதிக அளவில் செலவிட்டு வருகின்றன. நவீன ஆயுதங்கள் கண்டுபிடிப்பு, அணு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டின் பலத்தை உயர்த்திவருகின்றன. பாதுகாப்பு துறையில் தரைப்படை, கடற்படை,விமானப்படை என மூன்று படைப்பிரிவுகள் உள்ளது.

இந்நிலையில் மற்றநாடுகளை விட ஒருபடி மேலே சென்றுள்ள அமெரிக்கா ‘ஸ்பேஸ் போர்ஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விண்வெளிப்படையை உருவாக்கியுள்ளது. இந்த படைப்பிரிவில் மொத்தம் 16 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த விண்வெளிப்படை அமெரிக்க தகவல் தொடர்பு, செயற்கைக்கோள் உள்ளிட்ட சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

us,astronauts,guardians,space force ,அமெரிக்கா, விண்வெளி வீரர்கள், பாதுகாவலர்கள், விண்வெளி படை

இந்நிலையில், இந்த படைப்பிரிவில் உள்ள வீரர்களை எப்படி அழைப்பது என எந்தவித அதிகாரப்பூர்வமாக பெயரும் வைக்கப்படாமல் இருந்தது. இதனால், இந்த விண்வெளிப்படை பிரிவினரை எவ்வாறு அழைப்பது என்பது குறித்து யோசனைகள் அளிக்க அமெரிக்க விண்வெளிப்படை பொதுமக்களிடம் கருத்துக்கேட்டது. அதில் பெரும்பாலானோர் இந்த படை வீரர்களை ’கார்டியன்ஸ்’ என அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, அமெரிக்க விண்வெளி படையின் பணியாற்றும் வீரர்கள் ’கார்டியன்ஸ்’ என அழைக்கப்படுவார்கள் என இன்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்க விண்வெளி படையினர் இனி ‘கார்டியன்ஸ்’ என அழைக்கப்பட உள்ளனர். இந்த பெயர் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் வெளியிடவுள்ளார்.

Tags :
|