நாளை 9 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு
By: Nagaraj Fri, 20 Jan 2023 6:28:01 PM
கொழும்பு: நீர் வெட்டு அமல்... கொழும்பின் பல பகுதிகளிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 9 மணி நேரத்திற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை 9 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்ட மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை-முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள்.
இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு
நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு
நிலையத்தில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப்
பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எனவே,
நீர் வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை
தவிர்த்துக்கொள்ள நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களிடம்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.