Advertisement

குவாட் உச்சி மாநாடு ரத்தானதாக அறிவிப்பு

By: Nagaraj Thu, 18 May 2023 1:31:50 PM

குவாட் உச்சி மாநாடு ரத்தானதாக அறிவிப்பு

ஆஸ்திரேலியா: குவாட் மாநாடு ரத்து... ஜோ பைடனின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் குவாட் உச்சிமாநாடு ரத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், ஜப்பானின் புமியோ கிஷிடா ஆகியோர் மே 24ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க இருந்தனர்.

quad conference,cancellation,australia,jobaidan,travel ,குவாட் மாநாடு, ரத்து, ஆஸ்திரேலியா, ஜோபைடன், பயணம்

இந்நிலையில், அமெரிக்காவில் நிலவும் கடன் நெருக்கடி பிரச்சனை தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதால், தனது ஆஸ்திரேலிய பயணத்தை ஜோ பைடன் ரத்து செய்துள்ளார்.

இதனையடுத்து, குவாட் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் அறிவித்துள்ளார். எனினும், வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜப்பானில் நடைபெறும் ஜி7 தலைவர்களின் மாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :