Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஏப்ரல் 11 முதல் 6 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு

ஏப்ரல் 11 முதல் 6 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு

By: vaithegi Tue, 04 Apr 2023 10:21:27 AM

ஏப்ரல் 11 முதல் 6 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு

சென்னை: ஏப்ரல் 11 முதல் 6 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அதற்கான அட்டவணை வெளியீடு ... தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து 11-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதன் இடையில், அடுத்ததாக 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஆண்டு தேர்வு தொடங்கப்படவுள்ளது.

examination,student ,தேர்வு, மாணவ, மாணவி

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஆண்டு தேர்வு நடைபெறும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். ஆண்டு தேர்வுக்கான அட்டவணையும் தற்போது வெளியிடபட்டுள்ளது.

எனவே அதன்படி, ஏப்ரல் 11 – தமிழ், 12 – ஆங்கிலம், 18- கணக்கு, 19- அறிவியல், 24- சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 25-ஆம் ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :