Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேலும் 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்

மேலும் 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்

By: Nagaraj Sat, 11 Mar 2023 6:58:10 PM

மேலும் 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்

நியூயார்க்: மேலும் 1000 ஊழியர்கள் பணிநீக்கம்?... உலகின் நம்பர் ஒன் சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் சில மாதங்களுக்கு முன்பு 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில், தற்போது மேலும் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

emplyees,facebook,social-media, ,ஊழியர்கள், சமூக வலைதளங்களில், பேஸ்புக்

குறிப்பாக மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சில மாதங்களுக்கு முன்பு 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த போது, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

இந்நிலையில், 13 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Tags :