Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 155 பேர் கொரோனாவால் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 155 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Sat, 25 July 2020 11:33:49 AM

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 155 பேர் கொரோனாவால் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 3,274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,43,297 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 21வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

kanyakumari district,corona virus,infection,treatment,kills ,கன்னியாகுமரி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 3,274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,429 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,323 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 27 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :