Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐக்கிய அரபு எமிரேட்சில் மேலும் 421 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்சில் மேலும் 421 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Wed, 01 July 2020 2:38:24 PM

ஐக்கிய அரபு எமிரேட்சில் மேலும் 421 பேர் கொரோனாவால் பாதிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்றுக்கு நேற்று மேலும் 421 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பாதிப்புகளை கட்டுப்படுத்த (UAE) அந்நாட்டு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொள்கிறது.

இந்நிலையில் இன்று புதிதாக 421 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

united arab emirates,corona,impact,315 killed,test ,ஐக்கிய அரபு, கொரோனா, பாதிப்பு, 315 பேர் பலி, பரிசோதனை

இதனால் நாட்டின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 48,667 ஆக அதிகரித்தது. அரபு எமிரேட்சில் புதிதாக ஒருவர் பலியானார்.

நாட்டில் தற்போது வரை 315 பேர் பலியாகியுள்ளனர். 63,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரபு எமிரேட்சில் நேற்று 490 பேர் புதிதாக குணமடைந்தனர். மொத்தமாக 37,566 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தனர். தற்போது 11,101 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|