Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது

By: vaithegi Thu, 28 July 2022 12:47:15 PM

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது

தமிழகம்: தமிழகத்தில் உள்ள மின் தேவைகளை அறிந்து தமிழக அரசு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது. குறிப்பாக வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர், மின் கட்டணத்தில் மாற்றம் ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளது.

மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள மின்கட்டணம் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து கொண்டு வருகிறது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசு தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. a

free electricity,farmers ,இலவச மின்சாரம்,விவசாயிகள்

அதன்படி இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு வழங்குவதற்கான முயற்சியில் இருப்பதாக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வாங்கப்பட உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சூரிய மின் சக்தி பூங்கா திருவாரூரில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags :