Advertisement

குரூப் 4 தேர்வு முடிவுகளில் மேலும் ஒரு சர்ச்சை

By: vaithegi Fri, 07 Apr 2023 12:10:06 PM

குரூப் 4 தேர்வு முடிவுகளில் மேலும் ஒரு சர்ச்சை

சென்னை: தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் விஏஓ பணியிடங்களுக்கான குரூப்- 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 -ஆம் தேதி நடத்தப்பட்டது.

இதனை அடுத்து இத்தேர்வானது TNPSC சார்பில் தட்டச்சர், இளநிலை உதவியாளர், வரைவாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்பட்டது.மொத்தம் 10,117 காலிப் பணியிடங்களுக்கு இத்தேர்வு நடத்தப்பட்டது.

அதில் ஸ்டெனோ டைப்பிங் பிரிவில் மட்டும் 2 ஆயிரத்து 500 காலிப்பணியடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அதில் 2500 பணியிடங்களுக்கு சுமார் 420 பேர் தேர்ச்சி பெற்றனர்.

group 4 exam result,vacancies,controversy ,குரூப் 4 தேர்வு முடிவு,காலிப்பணியடங்கள் ,சர்ச்சை

இதையடுத்து அதில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தேர்ச்சி பெற்று இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பதால் முறைகேடு நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து TNPSC விளக்கம் கொடுக்காத நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :