Advertisement

மற்றொரு ‘தேர்தல் வாக்குறுதி'.. கலைஞர் உணவகம்..

By: Monisha Tue, 05 July 2022 9:31:33 PM

மற்றொரு ‘தேர்தல் வாக்குறுதி'.. கலைஞர் உணவகம்..

டெல்லி:திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி தமிழ்நாட்டில் பேரூராட்சி பகுதிகளில் விரைவில் கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆட்சியை பிடித்த திமுக தேர்தல் அறிக்கையில் பேரூராட்சி பகுதிகளில் 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

கொரோனா காலத்திலும் இதர பேரிடர் காலங்களிலும் இந்த உணவகங்களில் கட்டணம் இல்லாமல் உணவு வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இதே போன்று கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் 'கலைஞர் உணவகம்' என்ற பெயரில் அமைக்கபட உள்ளன

kalaignar restaurant,election,food,help , கலைஞர் உணவகம், பேரிடர்,கொள்முதல்,ஊட்டச்சத்து,

இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் உணவுத்துறைகாக ரூ.2,000 கோடி மானியத் தொகையை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டோம். தேர்தலில் வாக்குறுதி அளித்ததைபோல், பேரூராட்சி பகுதிகளில் விரைவில் கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும். அனைத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்." என்றார்.

கடந்த நவம்பர் மாதம், தேசிய மாதிரி சமுதாய சமையல் கூட திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை 'அம்மா உணவகம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உளளாட்சி அமைப்புகளின் மூலமாக நடத்தி வருகிறது.ஒரு உணவகம் நடத்த சராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.3.5 லட்சம் செலவிடப்படுகிறது.
இத்திட்டத்தை வெற்றிகரமாகவும் தொடர்ந்து நடத்திடவும் தேவையான அனைவருக்கும் விரிவுபடுத்திடவும் மத்திய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 ன் கீழ் 100 விழுக்காடு நிதி உதவி வழங்கிட வேண்டும்." என்று கூறி இருந்தார்.

Tags :
|