Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராயகடா மாவட்டத்தில் மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டது

ராயகடா மாவட்டத்தில் மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டது

By: Nagaraj Sun, 18 June 2023 8:46:42 PM

ராயகடா மாவட்டத்தில் மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டது

புவனேஸ்வர்: பாலசோர் மாவட்டத்தில் நடந்த மும்முனை ரயில் சோகம் மாறாத நிலையில் ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்பதோலாவில் நேற்று மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டது.

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள அம்படோலாவில் இருந்து லாஞ்சிகரில் உள்ள வேதாந்தா லிமிடெட் ஆலைக்கு சிறப்பு வழித்தடத்தில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

4 coaches,accident,freight train,odisha,track, ,ஒடிசா, சரக்கு ரெயில், தடம், விபத்து, 4 பெட்டிகள்

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் அல்லது காயம் ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் இல்லை என்றும், சிறப்புப் பாதையில் ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

ஜூன் 2 ஆம் தேதி, பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தில் மூன்று தொடர்ச்சியான ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த பயங்கர விபத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|