Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி நடைபாதையில் மற்றொரு சிறுத்தை பிடிபட்டது: இதுவரை 6 சிறுத்தைகள் சிக்கின

திருப்பதி நடைபாதையில் மற்றொரு சிறுத்தை பிடிபட்டது: இதுவரை 6 சிறுத்தைகள் சிக்கின

By: Nagaraj Wed, 20 Sept 2023 2:55:23 PM

திருப்பதி நடைபாதையில் மற்றொரு சிறுத்தை பிடிபட்டது: இதுவரை 6 சிறுத்தைகள் சிக்கின

திருப்பதி: கடந்த மாதம் திருப்பதி நடைபாதையில் பெற்றோருடன் நடந்து சென்ற லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்றது.

சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடைபாதை அருகே பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. 2 வாரத்தில் 5 சிறுத்தைகள் வரிசையாக சிக்கியது. கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தைகள் வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன.

வன உயிரியல் பூங்காவில் உள்ள 5 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தையை அடையாளம் காண டி.என்.ஏ. சோதிக்கப்பட்டது. சோதனையின் முடிவில் சிறுமியை 2 சிறுத்தைகள் கொல்லவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து வன சரணாலயங்களில் 2 சிறுத்தைகள் விடப்பட்டன.

6th leopard,forest zoo,tirupati footpath , உயிரியல் பூங்கா, 6வது சிறுத்தை, திருப்பதி நடைபாதை

இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாடுவதை வாகனங்களில் செல்லும் பக்தர்கள் பார்த்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன.

அலிபிரி வழித்தடத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தையை வனத்துறையினர் வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

பக்தர்கள் பாதயாத்திரையில் பாதுகாப்பாக நடந்து செல்லுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags :