Advertisement

வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு மீண்டும் ஒரு சூப்பர் அப்டேட்

By: vaithegi Sat, 22 Apr 2023 1:34:59 PM

வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு மீண்டும் ஒரு சூப்பர் அப்டேட்

இந்தியா:குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தங்கள் செய்திகள் மறைந்துவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு அப்டேட் ... மக்கள் அதிகம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலி வாட்ஸ்ஆப்பயனர்களின் வசதிக்காக பல அப்டேட் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த அப்டேட் பயனர்கள் நல்ல வரவேற்பை பிடித்துள்ளது.

அந்த வகையில் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தங்கள் செய்திகள் மறைந்துவிட வேண்டும் என விரும்பும் பயனர்களுக்கு இவ்வசதி பயனுள்ளதாக இருக்கும். அதன் படி சிலர் அனுப்பும் செய்திகள் காணாமல் போக வேண்டும் என்று செட் செய்யப்பட்டாலும், இவ்வசதியால் நாம் அழியாமல் பார்த்துக் கொள்ளலாம்.

update whatsapp ,அப்டேட் ,வாட்ஸ்ஆப்

இதையடுத்து இந்த கெப்ட் மெசேஜஸ் வசதி சிறந்த பாதுகாப்பு வசதியாகயிருக்கிறது. மேலும் குழு சாட்டில் உள்ள ஒருவர் காணாமல் போன செய்தியை வைத்திருக்கும் போது, அச்செய்தியை அனுப்புபவருக்கு தெரிவிக்கப்படும் என்றும், அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே அது முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டைமர் காலாவதியாகும் போது செய்தி தானாகவே நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மறைந்து போகும் செய்திகளை நீங்கள் சேமித்தால், அவை புக்மார்க் ஐகானுடன் லேபிளிடப்படும், மேலும் சாட் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட Kept Messages அம்சத்தில் அந்த மெசேஜ்களை பார்க்க முடியும்.

Tags :