Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜெ.அன்பழகனின் மகனான ராஜா அன்பழகனுக்கு திமுகவில் பொறுப்பு

ஜெ.அன்பழகனின் மகனான ராஜா அன்பழகனுக்கு திமுகவில் பொறுப்பு

By: Monisha Sat, 25 July 2020 2:50:16 PM

ஜெ.அன்பழகனின் மகனான ராஜா அன்பழகனுக்கு திமுகவில் பொறுப்பு

கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் மகனான ராஜா அன்பழகனுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட அமைப்பின் பிற நிர்வாகிகள் சிற்றரசுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஜெ. அன்பழகன் மறைவை அடுத்து சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நே.சிற்றரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

dmk,j anpalagan,raja anpalagan,mk stalin ,திமுக,ஜெ அன்பழகன்,ராஜா அன்பழகன்,முக ஸ்டாலின்

சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நே.சிற்றரசு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகனை நியமனம் செய்துள்ளார்.

மறைந்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags :
|