Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முகேஷ் அம்பானிக்கு மும்பையில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் அன்டிலியா பங்களா

முகேஷ் அம்பானிக்கு மும்பையில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் அன்டிலியா பங்களா

By: Karunakaran Mon, 30 Nov 2020 4:08:58 PM

முகேஷ் அம்பானிக்கு மும்பையில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் அன்டிலியா பங்களா

தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு மும்பையில் அன்டிலியா என்ற பங்களா, மிகவும் விலை மதிப்புமிக்க தனியார் சொத்துக்களில் ஒன்றாகவும், மும்பை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த பங்களாவின் மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி ஆகும். இந்த பங்களாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.

தனது மனைவி நீட்டா மற்றும் குழந்தைகள் ஆனந்த், ஆகாஷ், இஷா ஆகியோருடன் உள்ள புகைப் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இஷா திருமணம் ஆகி கணவர் ஆனந்த் பிரமளுடன் வோர்லி பங்களாவில் தற்போது வசித்து வருகிறார். இந்த பங்களாவில் 27 தளங்கள் உள்ளன. இந்த பங்களா இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு அடுத்தபடியாக மிகவும் அதிக விலைமதிப்பு கொண்ட பங்களாவாக கருதப்படுகிறது.

antelia bungalow,15000 crore,mumbai,mukesh ambani ,அன்டெலியா பங்களா, 15000 கோடி, மும்பை, முகேஷ் அம்பானி

அட்லாண்டிக் பெருங்கடல் அருகில் அமைந்துள்ள அன்டிலியா தீவின் பெயரே இந்த பங்களாவுக்கு வைக்கப்பட்டுள்ளது. பங்களாவின் மேல் தளத்தில் 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 128 கார்களை நிறுத்தும் வசதியும் உள்ளது. மிகவும் வேகமாக செல்லும் 9 விரைவு லிப்டுகளும் உள்ளன. மேலும் 50 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து படம் பார்க்கும் திரை அரங்கம், மேற்கூரையில் 3 தொங்கும் தோட்டம், நீச்சல்குளம், ஸ்பா, ஹெல்த் சென்டர், கோவில், பனி அறை ஆகியவையும் உள்ளன.

24 மணிநேரமும் பணியாற்ற வசதியாக 600 பணியாளர்கள் தங்குவதற்கான இடவசதியும் இந்த பங்களாவில் உள்ளது. சூரியன் மற்றும் தாமரை வடிவமைப்புகளை கொண்டதாக இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. 8 ரிக்டர் அளவு வரையிலான பூகம்பத்தை தாங்கும் சக்தி கொண்டது. இந்த பங்களா கட்டும் பணிகள் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. 2012-ம் ஆண்டு முகேஷ் அம்பானி குடும்பத்தினர் இந்த பங்களாவில் குடியேறினர்.

2012-ம் ஆண்டு முகேஷ் அம்பானி இந்த பங்களாவில் குடியேறிய பிறகு உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்தார். தற்போது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

Tags :
|