Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சைதாப்பேட்டை சுற்றுச்சூழல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சைதாப்பேட்டை சுற்றுச்சூழல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

By: Monisha Tue, 15 Dec 2020 2:24:47 PM

சைதாப்பேட்டை சுற்றுச்சூழல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சுற்றுச்சூழல் அலுவலகம் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் செயல்பட்டு வருகிறது. இங்கு சூப்பிரண்டாக பணிபுரிபவர் பாண்டியன். இவர் சுற்றுச்சூழல் தொடர்பான அனுமதிக்கு பல்வேறு நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று வருவதாக மாநில லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனின் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கூடுதல் டி.எஸ்.பி. தலைமையில் நேற்று மாலையில் தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. அதிகாரி பாண்டியனின் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. அங்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையின்போது வீட்டில் கட்டுக்கட்டாக பணமும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

environment,officer,anti corruption police,inspection,seizure ,சுற்றுச்சூழல்,அதிகாரி,லஞ்ச ஒழிப்பு போலீஸ்,சோதனை,பறிமுதல்

நேற்று இரவு 10.00 மணி வரையில் ரூ.50 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. நேற்று பிற்பகலில் தொடங்கிய லஞ்ச ஒழிப்பு சோதனை இரவு முழுவதும் நீடித்து இன்று 2-வது நாளாகவும் தொடங்கியது. இதுவரை 1.37 கோடி ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். 3 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று காலையில் வைரம் மற்றும் வெள்ளி நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.5½ லட்சம் மதிப்பிலான வைர நகைகளும், ரூ.1½ லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளும் சிக்கியுள்ளன.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்கள் மற்றும் சோதனை சாவடிகளில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவது தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனடியாக பொதுமக்கள் கொடுக்கக்கூடாது. அதுபற்றி லஞ்ச ஒழிப்பு துறையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags :