Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேஜஸ்வி யாதவ் தவிர மேலும் ஒரு துணை முதல்வரை நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை

தேஜஸ்வி யாதவ் தவிர மேலும் ஒரு துணை முதல்வரை நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை

By: Nagaraj Fri, 13 Jan 2023 10:11:24 AM

தேஜஸ்வி யாதவ் தவிர மேலும் ஒரு துணை முதல்வரை நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை

பீகார்: தேஜஸ்வி யாதவ் தவிர மேலும் ஒரு துணை முதல்வரை நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பீகாரில் கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து முதல்வரானார் நிதிஷ்குமார். பின்னர் பா.ஜ.க. கொடுத்த நெருக்கடியாலும், பா.ஜ.க.வின் திரை மறைவு வேலைகளைக் கண்டு கூட்டணியை முறித்துக் கொண்டு லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து முதல்வராகத் தொடர்கிறார்.

புதிய கூட்டணியிலுமே லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிமீது ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அதேபோல லாலு கட்சி பிரமுகர்களும் நிதிஷ்குமார் மீது ஏதாவது ஒரு புகாரை தெரிவித்து புகைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஷ்ட்ரீய லோக சமதா கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு திரும்பிய முன்னாள் மத்திய அமைச்சரும், நிதிஷ்குமாருக்கு ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்தவருமான உபேந்திர குஷ்வாஹா, பீகார் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்ற வதந்தி நிலவி வந்தது.

bjp,opposition,deputy chief minister,scheme,chief minister ,பாஜக, எதிர்கட்சிகள், துணை முதல்வர், திட்டவட்டம், முதல்வர்

தற்போது துணை முதல்வராக உள்ள லாலுவின் மகன் தேஜஸ்வியின் அதிகாரத்தையும் செயல்பாடுகளையும் குறைக்கும் நோக்கில் இந்த முடிவை நிதிஷ் எடுத்துள்ளதாகவும் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தேஜஸ்வி யாதவ் தவிர மேலும் ஒரு துணை முதல்வரை நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சமாதான யாத்திரை நடத்தி வரும் நிதிஷ்குமார், மதுபனியில் ஒரு நிகழ்ச்சியில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவராக இருக்கும் உபேந்திர குஷ்வாஹாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார். அப்போது மேலும் ஒரு துணை முதல்வர் நியமிக்கப்படலாம் என்று பலரும் பேசிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இதில் எந்த உண்மையும் இல்லை. சிலர் வேறு வழியாக நிர்ப்பந்தங்கள் கொடுக்க முயல்கின்றனர். அதுநடக்காது. மீண்டும் ஒரு தவறை நான் செய்யமாட்டேன். எங்களது ஆட்சி ஏழு கட்சி கூட்டணி கொண்டது. வேண்டுமானால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம்.

காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியிலிருந்து புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று தெரிவித்தார். சமீபகாலமாக நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகும் ஆசை தமக்கு இல்லை என்றும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கையில் அந்த பொறுப்பை கொடுக்க விரும்புவதாகவும் கூறிவருகிறார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்தல் வருவதால் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் பணியில் தமது கவனத்தை செலுத்தப்போவதாகவும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|