Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல் முறையீடு

உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல் முறையீடு

By: vaithegi Wed, 08 Nov 2023 2:09:33 PM

உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல் முறையீடு


சென்னை: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.

இதையடுத்து அந்த மனுவில் கட்சியில் இல்லாத ஒருவர் அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது சட்டத்திற்கு முரணானது. மேலும் இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஓ.பன்னீர் செல்வம், கட்சி சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவ்வழக்குசென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

appeal,o. panneer selvam,high court ,மேல் முறையீடு,ஓ.பன்னீர் செல்வம்,உயர்நீதிமன்ற


அப்போது, அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். இந்த நிலையில், அதிமுக பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த மேல் முறையீடுமனுவை அவரச மனுவாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் அவசர வழக்காக விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|