Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

By: vaithegi Wed, 26 July 2023 10:19:23 AM

செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை


சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகயிருந்தபோது செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாகவும், சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாகவும் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

இதை தொடர்ந்து 3-வது நீதிபதியான கார்த்திகேயன் செந்தில் பாலாஜியை காவல் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். எனவே இதன் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காவிரி மருத்துவமனையிலிருந்து செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

inquiry,senthil balaji ,விசாரணை,செந்தில் பாலாஜி

இதற்கு இடையே செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, பாரதி சக்கரவர்த்தி அமரில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை உயர்நீதிமன்ற வழக்கு நிலுவையில் வைக்க செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இருதரப்பினரும் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளதால் இந்த விஷயத்தில் தாங்கள் இனி எதையும் கூறப்போவதில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை காவல் பற்றி உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம். எம். சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Tags :