Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அண்ணா பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவுகள் இந்த தேதி முதல் துவக்கம்

அண்ணா பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவுகள் இந்த தேதி முதல் துவக்கம்

By: vaithegi Sun, 29 Jan 2023 9:18:08 PM

அண்ணா பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவுகள் இந்த தேதி முதல் துவக்கம்

சென்னை: விண்ணப்பப் பதிவுகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவக்கம் ..... நடப்பு கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பப் பதிவுகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

application forms,anna university , விண்ணப்பப் பதிவுகள்,அண்ணா பல்கலைக்கழகம்

எனவே, விருப்பமுள்ளவர்கள் வரும் 1-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.அண்ணா பல்கலைக்கழகம் MBA மற்றும் MCA உள்ளிட்ட படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப சாளரத்தை பிப்ரவரி மாதம் 20-ம் தேதி வரைக்கும் திறந்திருக்கும்.

இதையடுத்து இக்குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்படி மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் முடிவு பெற்ற பிறகு, இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறைகள் துவங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :