Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி படிப்பின் கல்வி உதவித்தொகைக்கு செப்டம்பர் 30ம் வரை ,உயர் கல்விப்படிப்புக்காக அக்டோபர் 31ம் வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி படிப்பின் கல்வி உதவித்தொகைக்கு செப்டம்பர் 30ம் வரை ,உயர் கல்விப்படிப்புக்காக அக்டோபர் 31ம் வரை விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Mon, 08 Aug 2022 8:55:39 PM

பள்ளி படிப்பின் கல்வி உதவித்தொகைக்கு செப்டம்பர் 30ம் வரை ,உயர் கல்விப்படிப்புக்காக அக்டோபர் 31ம் வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை : தமிழகத்தில் மாணவர்களிடம் கற்றல் இடைவெளியை தவிர்ப்பதற்கு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. இதை தொடர்ந்து தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் மதம் உள்ளிட்டவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

scholarship,higher education ,கல்வி உதவித்தொகை,உயர் கல்விப்படிப்பு

மேலும் இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயின்று வரும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. அத்துடன் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பின் கல்வி உதவித்தொகைக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதி மற்றும் உயர் கல்விப்படிப்புக்காக வருகிற அக்டோபர் மாதம் 31ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு ஏற்கனவே பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் தங்களின் ஆதார் குறித்த விவரத்தை இணைக்க வேண்டும். இதே போல் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி நிலையங்கள் தங்களின் குறியீட்டு எண்ணை தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :