Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

By: vaithegi Sun, 04 Sept 2022 7:15:45 PM

பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி படிப்பை மேற்கொள்ள அரசு பல வகையான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது. அதன்படி சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

scholarship,schooling ,கல்வி உதவித்தொகை,பள்ளி படிப்பு


இதை அடுத்து இந்த உதவித்தொகை நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பிற்க்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதே போல் 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கைத் தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் ஆகிய படிப்பை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதே போன்று தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி படிப்பை மேற்கொள்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு வருகிற செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதே போல் பள்ளி மேற்படிப்புக்கான உதவித்தொகைக்கு அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதனையடுத்து இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags :