Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு நியமனம்

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு நியமனம்

By: Nagaraj Thu, 19 Nov 2020 9:36:10 PM

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு நியமனம்

நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு... கண்டியின் சில பகுதிகளில் ஏற்பட்ட சிறியளவிலான நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்ய புவியியலாளர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டியின் ஹாரகம, அனுரக, திகன ஆகிய பிரதேசங்களில் நேற்று காலை 9.27 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

earthquake,small scale,survey,authorities ,நிலநடுக்கம், சிறியஅளவு, ஆய்வு, அதிகாரிகள்

30 செக்கன்கள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 2.25 ஆக பதிவாகியது என புவியியல் ஆய்வு பணியக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, கண்டி, திகன பகுதியில் கடந்த செப்டம்பர் மாதமளவில் ஏற்கனவே இரண்டிற்கும் குறைவான சிறிய நடுக்கங்கள் பதிவாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|