Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் வக்கீல் நியமனம்

உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் வக்கீல் நியமனம்

By: Nagaraj Thu, 08 Sept 2022 09:33:06 AM

உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் வக்கீல் நியமனம்

லண்டன்: இந்திய வம்சாவளி பெண் நியமனம்... இங்கிலாந்து உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண் வழக்கறிஞர் சுயெல்லா பிராவர்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தாயார் தமிழகத்தை சேர்ந்தவர்.

இங்கிலாந்தின் புதிய பிரதமாராக நேற்று முன்தினம் லிஸ் டிரஸ் தேர்வு ெசய்யப்பட்டார். இதையடுத்து, அவர் தனது புதிய அமைச்சரவையை உருவாக்கி வருகிறார். லிஸ் பிரதமராக அறிவிக்கப்பட்டதும், முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரதி படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

indian origin,oath of office,london,home secretary,slogans ,இந்திய வம்சாவளி, பதவிப்பிரமாணம், லண்டன், உள்துறை அமைச்சர், வாசகங்கள்

இந்நிலையில், புதிய உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுயெல்லா பிராவர்மேனை (42) பிரதமர் லிஸ் டிரஸ் நியமித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சுயெல்லா, போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வந்தார். 2 குழந்தைகளின் தாயான இவர், தமிழ்நாட்டை சேர்ந்த தாய் உமா, கோவாவை சேர்ந்த தந்தை கிறிஸ்டி பெர்னாண்டஸ் ஆகியோரின் மகள் ஆவார்.

இவர் புத்தரின் வாசகங்கள் அடங்கிய 'தம்மபத' நூலின் மீது நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|