Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குழந்தைகளின் போசாக்கின்மை குறித்து ஆராய விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்

குழந்தைகளின் போசாக்கின்மை குறித்து ஆராய விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்

By: Nagaraj Fri, 24 Mar 2023 8:19:44 PM

குழந்தைகளின் போசாக்கின்மை குறித்து ஆராய விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்

கொழும்பு: விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்... இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இந்த குழுவில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.இந்தக் குழுவில், நளின் பெர்னாண்டோ, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, கீதா குமாரசிங்க மற்றும் அலி சப்ரி ரஹீம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

parliament,resolution,appointment,report,children,committee ,நாடாளுமன்றம், தீர்மானம், நியமனம், அறிக்கை, குழந்தைகள், குழு

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை அடையாளம் காணவும், இந்த நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் அவசியமான தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது நியமிக்கப்படும் தற்காலிக குழுக்களாகும். ஒவ்வொரு குழுவும் அத்தகைய குறிப்பிடப்பட்ட ஒரு விஷயத்தை விசாரித்து சபைக்கு அறிக்கை செய்வதற்காக நாடாளுமன்ற தீர்மானத்தால் நியமிக்கப்படுகிறது.

Tags :
|