Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன பணி ...சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை கலந்தாய்வு

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன பணி ...சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை கலந்தாய்வு

By: vaithegi Fri, 15 July 2022 4:32:49 PM

தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமன பணி ...சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை கலந்தாய்வு

தமிழகம் : தமிழக அரசுப் பள்ளிகளில் 2-ம் நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 13,331 பேரை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோர் அடங்கிய பள்ளி நிர்வாகக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனம் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதாவது TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRB நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும்.

இதை அடுத்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 15-ம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். மேலும் தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வரும் 18-ம் தேதிக்குள் CEO-க்கள் ஒப்புதல் தர வேண்டும்.

adjunct editor,commentary ,தற்காலிக ஆசிரியர்,கலந்தாய்வு

மேலும் தற்காலிக ஆசிரியராக தேர்வானோர் வரும் 20-ம் தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட 24 மாவட்டங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இடைநிலை ஆசிரியர் மாவட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 20 ஆம் தேதி தற்காலிக ஆசிரியர் பணியேற்கும் பள்ளியில் மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர் 19 ஆம் தேதியில் சேர்ந்தால் மட்டுமே தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் ஏற்படும் சங்கடங்கள் தவிர்க்கப்படும். எனவே வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கலந்தாய்வை நடத்தி முடித்து திங்கள் கிழமை பணிவிடுவிப்பு செய்தால் புதிய பணியிடத்தில் ஒருநாள் இரண்டு நாள் மட்டும் தற்காலிக ஆசிரியர் பணியாற்றி விட்டு மீண்டும் பணி இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

Tags :