Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிறித்தவ அமைப்புகள் சார்பாக பாராட்டு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிறித்தவ அமைப்புகள் சார்பாக பாராட்டு

By: vaithegi Sat, 22 Apr 2023 4:16:38 PM

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிறித்தவ அமைப்புகள் சார்பாக பாராட்டு

சென்னை: முதல்வருக்கு கிறிஸ்தவ அமைப்பினர் நன்றி ... இடஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் மக்களுக்கு படிப்பில், வேலைவாய்ப்பில், உதவித்தொகையில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இதனை இந்துக்களில் உள்ள ஆதிதிராவிடர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சட்ட அமைப்புள்ளது.

கிறிஸ்தவர்களில் உள்ள ஆதிதிராவிடர்கள் இதனை பயன்படுத்துவது முடியாது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி, சட்ட பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கிறிஸ்தவர்களில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கும் சலுகைகள் வழங்கும்படியாக,

privileges,praise,chief minister ,சலுகைகள் ,பாராட்டு,முதலமைச்சர்

இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தும் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்ட பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்த நிலையில், அது நிரைவேற்றப்பட்டது.

இந்நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிறித்தவ அமைப்புகள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

Tags :
|