Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் குழு அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் குழு அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்

By: Nagaraj Sun, 30 Oct 2022 6:34:12 PM

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் குழு அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல்

புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான குழு அமைக்கும் திட்டத்துக்கு, குஜராத் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.

பொது சிவில் சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என ஷாபானு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1985-ம் ஆண்டே பரிந்துரை செய்தது. இந்தியாவில் கோவா மாநிலத்தில் மட்டும் பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது.

அனைத்து பிரிவினருக்கும் பொதுவான சிவில் சட்டம் கோவா மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டதை, ‘‘ஜொலிக்கும் உதாரணம்’’ என உச்ச நீதிமன்றமே பாராட்டு தெரிவித்தது.

committee,gujarat govt decides to, ,குஜராத் அரசு, சட்டம், பொது சிவில், முடிவு

உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் அரசுகள் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைத்துள்ளன.

குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான குழு அமைக்கும் திட்டத்துக்கு, குஜராத் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார்.


இந்த குழுவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் 3 அல்லது 4 உறுப்பினர்கள் இடம்பெறுவர் என மத்திய அமைச்சர் புருசோத்தம் ரூபாலா தெரிவித்தார்.

Tags :