Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க ஒப்புதல்

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க ஒப்புதல்

By: Nagaraj Fri, 26 Aug 2022 7:31:48 PM

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க ஒப்புதல்

புதுடில்லி: உள்நாட்டில் விலையில் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை மாவு குறித்த மத்திய அரசின் முடிவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகின் மிகப் பெரும் கோதுமை உற்பத்தி நாடுகளான உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கு கடந்த 6 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. அதனால், சர்வதேச அளவில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


அதன் காரணமாக, இந்திய கோதுமைக்கு, சர்வதேச அளவில் தேவை அதிகமானதால், ஏற்றுமதியும் அதிகரித்தது. அதே வேளையில் கடந்த கோடைகாலத்தில் வீசிய வெப்ப அலை காரணமாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கோதுமை உற்பத்தி சற்று பாதிக்கப்பட்டது.

wheat,union cabinet,domestic,demand,export ,கோதுமை, மத்திய அமைச்சரவை, உள்நாடு, தேவை, ஏற்றுமதி

உற்பத்தி குறைந்ததால், உள்நாட்டிலேயே கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை அதிகரித்தது. அதனால், கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு. பொருளாதாரா விவகாரங்களுக்காக அமைச்சரவைக்கூட்டம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில், கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில், கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் சுமார் 1,850 கோடி ரூபாய் மதிப்பிலான கோதுமை மாவை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் 9,50 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|