Advertisement

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்

By: vaithegi Tue, 02 May 2023 1:50:44 PM

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்

இந்தியா: மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, 2023 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் இது வரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ரூ.1.87 லட்சம் கோடி வசூல் ..... இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி ) கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைடுத்து இந்த ஜிஎஸ்டி வரி அமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். மேலும் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வரி வசூல் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும்.

gst,collection ,ஜிஎஸ்டி ,வசூல்

அந்த வகையில் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் எவ்வளவு என்பது பற்றிய அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து அதன் படி இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஏப்ரல் 20 -ம் தேதி ஒரே நாளில் ரூ. 68.228 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வசூலான ஜிஎஸ்டி விட ரூ. 19,495 கோடி அதிகம் வசூல் செய்யப்பட்டு உள்ளது .

Tags :
|