Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 15ம் தேதி முதல் பயணிகள் விமான சேவையை தொடங்குவதாக அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

15ம் தேதி முதல் பயணிகள் விமான சேவையை தொடங்குவதாக அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

By: Nagaraj Fri, 05 June 2020 12:37:19 PM

15ம் தேதி முதல் பயணிகள் விமான சேவையை தொடங்குவதாக அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

வரும் 15ம் தேதி முதல் விமான சேவை... ஊரடங்கு விதிமுறைகளை ஒட்டி, அரபு எமிரேட்ஸில் ஜூன் 15 முதல் பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் விமான சேவைகளை மீண்டும் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தாண்டவம் ஆடி லட்சக்கணக்கானோரை பாதித்தது. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்சிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆயினும் ஊரங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, ஜூன் 15 முதல் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளும் விமான சேவையை தொடங்குகிறது.

precaution,airline,passenger,security,emirates ,முன்னெச்சரிக்கை, விமான சேவை, பயணிகள், பாதுகாப்பு, எமிரேட்ஸ்

இதனால் பல்வேறு நாடுகளுக்கும் பயணிகள் விமானங்களில் செல்ல முடியும் என கூறப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஜூன் 15 முதல் துபாய் உள்ளிட்ட 16 வெவ்வேறு நகரங்களுக்கு இடையே பயணிகள் விமானங்களை இயக்கவுள்ளது.

அதன்படி, எமிரேட்ஸ்.காம் மற்றும் பயண முகவர்கள் வழியாக முன்பதிவு செய்ய பின்வரும் நகரங்களுக்கான விமானங்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பஹ்ரைன், மான்செஸ்டர், சூரிச், வியன்னா, ஆம்ஸ்டர்டாம், கோபன்ஹேகன், டப்ளின், நியூயார்க் ஜே.எஃப்.கே, சியோல், கோலாலம்பூர், சிங்கப்பூர், ஜகார்த்தா, தைபே, ஹாங்காங், பெர்த் மற்றும் பிரிஸ்பேன் ஆகியவை அடங்கும்.

precaution,airline,passenger,security,emirates ,முன்னெச்சரிக்கை, விமான சேவை, பயணிகள், பாதுகாப்பு, எமிரேட்ஸ்

தொடர்ந்து, ஜூன் 8 முதல் கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பாகிஸ்தானின் பிற நகரங்களில் இருந்து எமிரேட்சின் பிற பகுதிகளுக்கு செல்ல விரும்புவோருக்கு விமானங்கள் கிடைக்கும் என எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

தற்போதைய அறிவிப்புகளுடன், ஜூன் 11 முதல் துபாயில் இருந்து லண்டனின் ஹூத்ரோ, ஜெர்மனியின் பிராங்பேர்ட், பிரான்சின் பாரிஸ், இத்தாலியின் மிலன், ஸ்பெயினின் மாட்ரிட், அமெரிக்காவின் சிகாகோ, கனடாவின் டொரண்டோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் உள்ளிட்ட 29 நகரங்களுக்கு எமிரேட்ஸ் பயணிகளுக்கு விமானங்களை வழங்கவுள்ளது.

பயணிகள் விமானங்களில் பயணம் செய்வதற்கு முன் தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Tags :