Advertisement

அகமதாபாத் கோயிலில் 3000 கிலோ ஆப்பிள்கள் வைத்து அர்ச்சனை

By: Nagaraj Wed, 14 Oct 2020 08:58:34 AM

அகமதாபாத் கோயிலில் 3000 கிலோ ஆப்பிள்கள் வைத்து அர்ச்சனை

கொரோனா நோயாளிகளுக்காக 3000 கிலோ ஆப்பிள்கள் அகமதாபாத் நாராயண் கோயிலில் வைத்து அர்ச்சனை செய்யப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, குஜராத்தில் இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற சுவாமி நாராயண் கோயிலில் கடவுள்களுக்கு படைப்பதற்காக 3000 கிலோ ஆப்பிள்கள் வைக்கப்பட்டுள்ளன.

corona,sick,apples,ahmedabad,temple ,கொரோனா, நோயாளிகள், ஆப்பிள்கள், அகமதாபாத், கோயில்

உலகம் முழுக்க இக்கோவிலின் கிளைகள் இருந்தாலும், இதுதான் முதன்மையானது. சுவாமி நாராயண் மரபினரால் கட்டப்பட்ட முதல் கோவில் இதுதான். 1822 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயில் குஜராத்தின் முக்கிய கோயிலாகவும் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

இக்கோயிலில் தெய்வங்களுக்குப் படைப்பதற்காக 3000 கிலோ ஆப்பிள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பச்சை மற்றும் சிவப்பு, தங்க ஆப்பிள்கள் சிறிய முக்கோணங்களாக தெய்வங்களுக்கு முன்பாகவும் படிக்கட்டுகளிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆப்பிள்கள் படைக்கப்பட்டபிறகு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags :
|
|
|