Advertisement

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறையா?

By: vaithegi Wed, 09 Aug 2023 09:58:50 AM

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறையா?

சென்னை: அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என வங்கி ஊழியர் சங்கங்கள் கோரிக்கையை முன் வைத்தனர். கடந்த ஜூலை 28ஆம் தேதி இந்த கோரிக்கையானது இந்திய வங்கி சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது .

இதனை அடுத்து இந்திய வங்கிகளின் நிர்வாகத்தின் பிரதிநிதி அமைப்பு இம்மனுவை நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியது.

வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும். மாதத்தின் 1 -வது மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் வங்கி ஊழியர்கள் பணி செய்ய வேண்டியது இல்லை. மேலும் இது தவிர கிளைகளில் தினசரி 45 நிமிடங்கள் நீடிக்க படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

holiday,bank employees,bank ,விடுமுறை,  வங்கி ஊழியர்கள் ,வங்கி

எனவே அதன்படி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஒன்று சுற்றறிக்கையை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதில் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் வேலை செய்ய ஐபிஏ ஒப்புக்கொண்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாலை 4:30 மணி வரை பணம் இல்லா பரிவர்த்தனைகள் மூலம் ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :