மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைந்ததா?
By: Nagaraj Thu, 06 Oct 2022 11:19:30 AM
சென்னை: மருத்துவப்படிப்புகளுக்கு 18760 பேர் விண்ணப்பித்த நிலையில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புப் பட்டப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கியது.
சென்னை, திருநெல்வேலி, தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 680 இடங்களும், உணவுத் தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம் மற்றும் கோழிப் பண்ணை தொழில்நுட்பம் ஆகியவற்றில் 100 இடங்களும் உள்ளன.
இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் கலந்தாய்வு மூலம்
நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பம் கடந்த 3ம் தேதி நிறைவடைந்தது.
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு மொத்தம் 16214 பேரும், தொழில்நுட்ப
பட்டப்படிப்புக்கு 13470 பேரும், 2744 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டை விட 18760 பேர்
விண்ணப்பித்த நிலையில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பப் பதிவு முடிந்துள்ளதால், தரவரிசைப்
பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு, முறையான கலந்தாய்வு மூலம் சேர்க்கை
நடைபெறும்.